குருத்துவப் பாடல்கள் | இதோ வருகின்றேன் நான் |
இதோ வருகின்றேன் நான் இதோ வருகின்றேன் இயேசுவின் நல் வார்த்தை நம்பி இதோ வருகின்றேன் பார்வையற்றோர் பார்க்க காது கேளாதவர் கேட்க எனைப் படைத்தவரின் துணை கொண்டு இதோ வருகின்றேன் ஆ..ஆ...ஆ...ஆ.. ஆபிரகாமை அழைத்த தேவன் என்னையுமே அழைத்திட்டார் ஆபேலின் காணிக்கைபோல் என்னையும் நான் அளித்திட்டேன் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நாளும் நடக்கும் போதெல்லாம் கரம் பிடித்துக் காக்கும் என் மார்போடு அணைக்கும் வல்ல தேவன் வார்த்தை நம்பி இதோ வருகின்றேன் ஆ..ஆ...ஆ...ஆ.. எளியோர்க்கு நற்செய்தி சொல்ல இதோ வருகின்றேன் சிறைப்பட்டோரை விடுவிக்க இதோ நானும் வருகின்றேன் இறை அருள் தரும் ஆண்டினை அறிவிக்க வருகிறேன் ஆயன் குரல் கேட்டு என் ஆடுகளைக் காக்க தூய ஆவி துணை கொண்டு இதோ வருகின்றேன் ஆ..ஆ...ஆ...ஆ.. அடிமைகளின் சங்கிலியை உடைக்க இதோ வருகின்றேன் அருட் சாதனம் நிறைவேற்ற ஆவலோடு வருகின்றேன் ஏழ்மை என்றும் அடிமை என்றும் இல்லை இந்த உலகிலே சமத்துவத்தைப் படைக்க இறை சமூகத்தை எழுப்ப ஆற்றல் தரும் ஆண்டவரை நம்பி வருகின்றேன் |