Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் இறையேசு பிறந்திங்கு ஈராயிரம்  


இறையேசு பிறந்திங்கு ஈராயிரம் ஆண்டு
நிறைவாகி வரும் யூபிலி - அது
நிறைவாகத் தரும் யூபிலி
புதிய யூபிலி புனித யூபிலி
இறைத்தந்தை கொடையாக மரியன்னை மகனாக
இருள் விலகிட ஒளி படர்ந்திட இறையரசினில் இகம் மலர்ந்திட

நெடுங்கால வரலாறு நமதாகுதே - அதன்
நடுநாயகன் இயேசு எனவாகுதே
பரலோகம் பூலோகம் எல்லாமுமே
சிரந்தாழ்த்தி புகழ்ந்தேற்றும் உன்நாமமே
பல்லுயிரும் புதுப்படைப்பாய்
மானிடமும் புதுப்பிறப்பாய்
இனி சிறந்திட எங்கும் ஒளிர்ந்திட புது விடியலும் இங்கு புலர்ந்திட

புது வானம் புது வையம் உண்டாகுதே
புது வாழ்வு புதுப்பாதை என்றாகுதே
விடிவெள்ளி என யேசு எழும்போதிலே
விடுதலையின் நற்செய்தி பூபாளமே
இறைமகனின் தலைமையிலே எளியவரின் தோழமையில்
புது உலகமும் நாம் படைத்திட புது சமூகமும் அதில் அமைந்திட


 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை