குருத்துவப் பாடல்கள் | என்னில் என்ன தகுதி கண்டாய் |
என்னில் என்ன தகுதி கண்டாய் என்னை உன் பணிக்கழைத்தாய் உன் பாதம் என் தஞ்சம் இறைவா இறைவா இறைவா இறைவா என் இறைவா கருவினில் என்னை உருவாக்கி எனக்கே நீ சொந்தம் என்றாய் உந்தன் கையில் பொறித்து என்னை உமக்கே உமக்கே சொந்தம் என்று பலம் தந்து பணி செய் என்றாய் அறிவுடையோர் பலர் நடுவில் அன்பாய் என்னைத் தேர்ந்து கொண்டாய் என்னில் வாழும் உயிராகி என் வாழ்வில் உணர்வோடு கலந்து நின்றாய் எந்தன் நாவில் உன் நாமம் இன்றும் சொல்ல எனைத் தேர்ந்தாய் உடனிருந்து என்னை ஆழ்வாய் உன் அருள் என்னும் அமுதத்தை தினம் பொறிக்க அடியேனை அழைத்தாய் |