Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் என்னை பெயர் சொல்லி அழைத்தாய்  

என்னை பெயர் சொல்லி அழைத்தாய்
என் இறைவா நன்றி நன்றி தலைவா
நான் பேறு பெற்றேன் பெரும் பேறு பெற்றேன்
நன்றி நன்றி இறைவா - இறைவா
நன்றி நன்றி தலைவா

உள்ளம் எனும் வீணையில் வெள்ளிச்சுரங்கள்
நன்றி சொல்லி சொல்லி பாடி துள்ளும் ஸ்வரங்கள்
வள்ளலே உம் அன்புப் பணிக்காக
என்னைத் தேர்ந்தெடுத்தாய் அருள் தினம் கொடுத்தாய்
சேர்ந்துழைத்தாய் நல்ல பலன் கொடுத்தாய்

மண்ணுலகெங்கும் உமதாட்சி
இங்கு சின்ன சிறியோரே உம் சாட்சி
அண்ணலே உம் அன்பை அவர்க்களித்து
உந்தன் பொன்னுலகை காட்டும் ஒளி கொடுத்தீர்
மண்ணுயிர்கள் வாழ உயிர் கொடுத்தீர்


 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை