Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் என் மக்களின் அழுகை  
என் மக்களின் அழுகை கேட்டேன்
சுமை சுமக்கும் வலிகள் அறிவேன்
ஆறுதல் கூறிடவும் ஆதரவாகிடவும்
யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்


கற்றதை உணர்த்தியே களைத்தவரை ஊக்குவித்தே
கண்களைக் கருணையின் ஒளியால் நிரப்புவேன்
கடவுளே நீர் என்னோடு இருக்க சிலுவையும் சுமப்பேன்
இதோ நான் இருக்கிறேன் இன்றே நான் வருகிறேன்
கடல் கடந்து போனாலும் தீ நடுவே நடந்தாலும்
தீமை உன்னை அணுகாது
நீ கலங்கிடாமலும் களைத்துப் போகாமலும்
உன் கால்கள் தடுமாறாமலும்
நாம் உன்னோடு இருந்து உன்னை உறுதிசெய்து
உன் கரம் பிடித்து அன்பால் வழிநடத்துவோம்


கூக்குரல் இன்றியே உம் அரசினை அறிவிப்பேன்
நீதியின் சார்பிலே நின்றிடத் தயங்கிடேன்
கடவுளே உந்தன் ஆவி என்னைக் காலமும் நடத்தும்
இதோ நான் இருக்கிறேன் இன்றே நான் வருகிறேன்
என் மக்களின் அழுகை கேட்டேன்
சுமை சுமக்கும் வலிகள் அறிவேன்
ஆறுதல் கூறிடவும் ஆதரவாகிடவும்
உன்னை நான் அனுப்புவேன் அபிஷேகம் செய்கிறேன்




 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை