குருத்துவப் பாடல்கள் | அழைத்தாயே உனக்காக இறைவா |
அழைத்தாயே உனக்காக இறைவா - உந்தன் பணிக்காக அழைத்தாயே தலைவா பணித்தாயே உன்அன்பை நான் கொடுக்க - வரம் கொடுத்தாயே பணிவாழ்வில் நான் நிலைக்க கோரஸ்: எந்நன்றி சொல்வேன் என் இறைவா என்றென்றும் நன்றி என் தலைவா என்மீது ஏன் அன்பு நீ காட்டினாய்? - இந்த ஏழை என் இதயத்தில் தீ மூட்டினாய்? எனக்காக நான் வாழ்ந்த காலத்திலே - என்னை வாவென்று ஏன்சொல்லி கரம் நீட்டினாய்? பலவீனன் எனைவிட்டு அகலும் என்றேன் - என் பயம் நீக்கி கைசேர்த்து அழைத்துச் சென்றாய் உன் அன்பை உணர்ந்திட்டேன் நான் மாறினேன் - உன் அருளாலே உன்சீடன் நான் ஆகினேன் ஊரெல்லாம் உன்தீபம் நான் ஏற்றினேன் - உன் பெயர் சொல்லி பல்வேறு பணியாற்றினேன் பல்லாண்டு கடந்தாலும் பணியாளனாய் - நான் பயணிக்கும் பேற்றுக்காய் கரம் கூப்பினேன். |