Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் 1612 -சுபதினம் இன்று சுபதினம்  

சுபதினம் இன்று சுபதினம்
மண்ணுலகில் இன்று சுபதினமே
இன்பம் பொங்கும் இந்நாளில்
இனிதான பொன்நாளில்
ஆஆ.ஆநாம் பாடுவோம் (2)
அல்லே அல்லே அல்லேலூயா (4)

மண்ணில் பணி செய்ய நல் மனதை ஈந்து
உண்மைப்பணி ஆற்றுகின்ற துறவறம் வாழ்க
பண்பட்ட இடமெல்லாம் கிறீஸ்து நாமம்
மண்ணுலகில் பரப்புகின்ற அருள்வரம் வாழ்க

புண்பட்ட மனத்தோர்க்கு ஊக்கம் ஊட்டும்
புனித நல் பணி செய்யும் துறவறம் வாழ்க
எந்நாளும் யேசுபிரான் வழங்கும் நல்வாழ்வை
எல்லோர்க்கும் பகிர்ந்தளிக்கும் நிறைவரம் வாழ்க

 

மகிழ்ந்திடாய் மாநிலமே - உந்தன் மைந்தரின் மாட்சியிலே - இன்று
பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று மகிழ்ந்திடாய் திரு மறையை