குருத்துவப் பாடல்கள் | 161 -குருத்துவப் புகழ் ஓங்கவே |
குருத்துவப் புகழ் ஓங்கவே (2) செந்தமிழ் நாவில் எழுந்த இப்பாவில் சிறந்த எம் திருமறைத் தொண்டர்கள் வாழியவே குருத்துவப் புகழ் ஓங்கவே பணிவிடை பெற அன்று - பணிவிடை புரியவும் பலரின் வாழ்வுக்கு பலியாய் வாழவும் (குருத்துவ) காவிரி தென்பண்ணை பாய்ந்து வரும் - வண்ண பூவிரிச் சோலைகள் பூத்து நிற்கும் ஆ.. வங்கக் கடல் அலைகள் தாலாட்டும் ஆ.. (2) தங்கத்திருநாடாம் தமிழக மண்ணதில் எங்கே யேசு என்னும் நாமம் முழங்கிட (முழங்கிடவே) இயல் இசை நாடக அரங்கினிலே - உயர் இலக்கியம் எழுந்திடும் ஏட்டினிலே ஆ.. தாயகப் பண்பாண்டில் சிறப்பினிலே ஆ.. (2) ஆய கலைகளெனும் அறுபத்தி நான்கிலும் நாயகன் யேசுவின் நற்செய்தி ஒலித்திட (ஒலித்திடவே) நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் நீங்கள் உலகின் சென்று பலன் தரும்படியாகவும் அந்தப்பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை நான் ஏற்படுத்தினேன். |