குருத்துவப் பாடல்கள் | 1608 -எங்கள் ஞானத் தந்தையர்க்கு |
எங்கள் ஞானத் தந்தையர்க்கு இறைவனே ஆசீர் அளித்திடுவீர் - எங்கள் பரமனின் பிரதிநிதியாம் அவரே - எம் பாப்பரசர் புகழ் ஓங்குகவே ஒழுக்கமும் உண்மையும் உரைப்பவரே அதில் வழுவா வரம் கொண்டிருப்பவரே வெண்பொன் நிறம் அவர் கொடியாமே மண்ணில் விளங்கிடும் அரசாமே காணும் திருச்சபைத் தலைவர் அவர் - உயர் மாண்பினைப் பாடிப் புகழ்ந்திடுவோம் |