Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

குருத்துவப் பாடல்கள் 1607 -ஆண்டவரின் ஆவி என் மேலே  
ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்

எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் - 2

உன்னை அன்று அழைத்ததும் நாமே
உரிய பெயரை வைத்ததும் நாமே
உன்னை அன்று மீட்டதும் நாமே
உனது துணையாய் இருப்பதும் நாமே

நிறை உண்மைக்கு சாட்சி சொல்லவும்
நோயுற்றோரைக் குணமாக்கவும்
ஆண்டவர் என்னைத் தேர்ந்தெடுத்தார் - 2

தீ நடுவே நீ நடந்தாலும்
ஆழ்கடலை தான் கடந்தாலும்
அருகிலேயே நாம் இருக்கின்றோம்
அணைத்து உன்னை வழி நடத்துகிறோம்

 

ஆண்டவரின் ஆவி என் மேலே
ஏனெனில் அவர் அபிஷேகம் செய்துள்ளார்