| தியானப் பாடல்கள் | உலகை மீட்க வந்தவனே |
|
உலகை மீட்க வந்தவனே ஆரிராராரோ கன்னி மரியின் வயிற்றில் உதித்தவனே கண்ணே ஆரிராரோ - 2 ஆரிராராரோ - 2 அழகு நிலவே அழியா ஒளியே அன்பே ஆரிராரோ ஆரிராராரோ - 2 மரியின் மகனே மழலை அமுதே கண்ணே ஆரிராரோ 1. கந்தை அணிந்த கதிரவனே ஆரிராராரோ கள்ளமில்லா கனியமுதே ஆரிராராரோ - 2 புல்லனையில் பூத்தவணே ஆரிராராரோ புதுமை செய்யும் புவியரசே ஆரிராராரோ மனிதம் மலர மகிழ்வு நிறைய புனிதம் அடைய புகழ்ச்சி ஓங்க வரங்கள் வழங்க வந்தவனே ஆரிராராரோ - 2 2. மாசில்லாத மாபரனே ஆரிராராரோ மாமரியின் மாணிக்கமே ஆரிராராரோ - 2 மாடடையில் மகிழ்பவனே ஆரிராராரோ மகிமை நிறை தூயவனே ஆரிராராரோ தூதர் புகழ இடையர் மகிழ ஞானிகள் வணங்க நானிலம் போற்ற நன்மை செய்யப் பிறந்தவனே ஆரிராராரோ - 2 |