தியானப் பாடல்கள் | கண்ணை மூடினேன் |
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் உன் முக அன்பில் உருகிப்போகிறேன் எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன் உன்னைக் கண்ட பின் என்ன வேண்டுவேன் என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள்புரிவாய் கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன் என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன் என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன் உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன் மண்டியிட்டு எனது பாதம் கழுவிச்சொன்ன உன் அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன் சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன் |