தியானப் பாடல்கள் | கடவுளே கடவுளே |
கடவுளே கடவுளே கடவுளே கடவுளே கடவுளே கருணை நினைந்து மகிழ்கின்றேன் கனிந்த உந்தன் அருளினில் நனைந்து நனைந்து புகழ்கின்றேன் மாண்பும் மகத்துவமும் நிறைந்தவரே (2) இரவின் நிழலில் புகலிடம் பெறுகின்றேன் வான்வரை உயர்ந்தது உம் பேரன்பு - எம் முடிகளைத் தொடுவது உம் அருள்வாக்கு உமது நீதி மலைபோல் உயர்வானது உமது தீர்ப்பு கடல்போல் ஆழமானது இறைவா ஆண்டவரே எம்மை ஆள்பவரே எத்துணை அருமை உமது பேரன்பு வாழ்வு தரும் அருளின் ஊற்று உம் உள்ளம் நிறைவை வழங்கும் எளிமை நிறைந்தது உம் இல்லம் எமது தாகம் தணிக்கும் நீரோடை நீர் எமது சுடரை ஏற்றும் பேரொளி நீர் இறைவா ஆண்டவரே எம்மை ஆள்பவரே எத்துணை அருமை உமது பேரன்பு |