Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  275-இறைமகன் யேசு பிரான்  


இறைவன் நமது வானக தந்தை
இதை உணர்ந்தாலே குளிர்ந்திடும் சிந்தை
குறைகள் தீரும் கவலைகள் மாறும்
குழம்பிய மனதில் அமைதி வந்தேறும்

பறவைகள் விதைப்பதும் அறுப்பதுமில்லை
பத்திரப்படுத்தி வைப்பதுமில்லை
மறந்து விடாமல் அவைகளுக்குணவு - 2
வாரி வணங்கி பேணியே காக்கும் பேணியே காக்கும்

வயல்வெளி மலர்களைப் பாரீர் அவைகள் வருந்தி
உழைப்பதும் நூற்பதுமில்லை
மயங்கிட வைக்கும் இவைபோல் சாலமோன் - 2
மன்னனும் என்றும் உடுத்தியதில்லை உடுத்தியதில்லை


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்