தியானப் பாடல்கள் | 273-இறைவன் தந்தார் தாலந்து |
இறைவன் தந்தார் தாலந்து
- அதில் முறையாய் கேட்பார் நாலைந்து இறைவன் தந்தார் தாலந்து பப தஸ ரிரி க -ஸனி ஸரி கப நிஸ ஸநி தநி ரிக நிஸ - தநி ஸக ரிக பநி ஸநி ஸக - நிஸ தரி - ஸக நிஸ - பபகதரிரிதநி ஐந்து இரண்டு ஒன்று என்று ஆற்றல் அறிவு தலைவன் தந்தான் தருணம் பார்த்து திரும்பி வந்து திருப்பிக் கொடுப்பாய் பணத்தை என்றார் ஐந்து பெற்றவன் விரைந்து வந்து ஐந்து உழைத்தேன் மேலும் என்றான் உழைப்பை புகழ்ந்து உவகை கொண்டு அழைத்துப் பதவி உயர்வு கொடுத்தார் இரண்டு பெற்றவன் விரைந்து வந்து இரண்டின் பலனாம் இரண்டை வைத்தான் பணியாள் ஆர்வம் கண்டு புகழ்ந்து பதவி உயர்த்தி பரிசு கொடுத்தார் விதைக்கா இடத்தில் அறுக்கும் உமக்கு புதைத்து வைத்தேன் ஒன்றைக் கொண்டே பயனே இல்லா பணியாள் நீயே துயரம் அழுகை உனக்கே உரிமை பப தஸ ரிரி க -ஸனி ஸரி கப நிஸ ஸநி தநி ரிக நிஸ - தநி ஸக ரிக பநி ஸநி ஸக - நிஸ தரி - ஸக நிஸ - பபகதரிரிதநி |