Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  266-இயேசுவே எனக்கொரு ஆசை  

இயேசுவே எனக்கொரு ஆசை - என்
நெஞ்சில் உள்ள ஆசை
கேட்பாயோ அன்போடு - என்
அன்பு தேவ தேவா

நெஞ்சுக்குள்ளே என்னவச்சு பூட்டிக் கொள்வாயா
கண்ணுக்குள்ளே கருவிழியாய் சேர்த்துக் கொள்வாயா
எண்ணமெல்லாம் கதைகதையாய் நான் சொல்லவேணும் - என்றும்
என்னருகில் நீ இருந்து என் குறை போக்கணும்

காடுமேடு எல்லாம் பூமியாகணும் - இந்த
சாதிமத பேதமெல்லாம் மாஞ்சு போகணும்
நம்பி வரும் மனிதரெல்லாம் வாழ்வு காணணும் - உனை
நாமணக்க பாடிப் பாடி நான் துதிக்கணும்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்