Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் உறவில் மனங்கள் இணைந்த நாளில்  
மங்களம் பொங்கும் நன்னாளிது....
மணமக்களே வாழ்க
மணமகன் கிறிஸ்து  - மணமகள் திருச்சபை
சங்கமிக்கும் நன்னாளிது
வாழ்க வாழ்க வா...ழ்க

உறவில் மனங்கள் இணைந்த நாளில்
மகிழ்ந்து வாழ்த்திடுவோம்
புதிய பயணம் தொடங்கும் நாளில்
நம்பிக்கை பெருகச் செய்வோம் - (2)

வேற்றுமை களையும் ஒற்றுமை உணர்வே
வாழ்வை சிறக்கச் செய்யும்
தன்னலம் கருதா தூய அன்பே
உவகை பெருகச் செய்யும் - (2)
இறைவன் தந்த புதிய உறவு
மகிழ்வாய் வாழ்ந்திடுங்கள்
தேர்ந்த இறைவன் தினமும் காப்பார்
அவரை நாடுங்கள்  (உறவில் மனங்கள்..)

இன்பம் துன்பம் ஏரும் எதுவும்
பகிரும் மனம் வேண்டும்
புரிதல் வளர்த்து மன்னித்து ஏற்கும்
விரிந்த கரம் வேண்டும்-(2)
தியாகம் பரிவு நாளும் நிலைத்தால்
குடும்பம் கோவிலாகும்
இறைவன் வார்த்தை வாழ்வில் கலந்தால்
பாதை தெளிவாகும் (உறவில் மனங்கள்...)



 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்