திருமணப் பாடல்கள் | கல்யாணமாம் கல்யாணம் |
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தன் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கல்யாணம் விருந்தினர்கள் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அறிந்த மரியாள் அவரிடம் அறிவிக்கவே விரைந்தனர் கருணை வள்ளல் இயேசுவும் கனிவாய் நீரை ரசமதாய் மாற்றி அனைவர் பசியையும் ஆற்றி அருளை வழங்கினார் இல்லறமாம் பாதையில் இல்லை என்னும் வேளையில் சொல்லிடுவீர் அவரிடம் நல்லறமாய் வாழுவீர் |