திருமணப் பாடல்கள் | இது மங்கள நேரம் மன்னவன் |
இது மங்கள நேரம் மன்னவன் எந்தன் உள்ளம் வருகின்ற நேரம் மணவாளன் கண்டு மணக்கோலம் கொண்டு மனம் துள்ளித் துள்ளி ஆடும் மேகம் திறந்து மின்னல் நுழைந்து தூவும் மழையைப் போல பாவம் துறந்து வானம் இருந்து வந்த உணவிது அருந்தவே இலைகள் சுமந்து மலர்கள் தவழ்ந்து வீசும் தென்றலாக உள்ளம் புகுந்து உயிரில் கலந்து உறைய வந்தவா வருகவே இனிமையெல்லாம் தன்னுள்ளே ஏந்தியே வந்த உணவு இது இனிதாக நமக்காக தந்தை காட்டும் உறவு இது விண்ணோர் உண்ட உணவு இது நம் முன்னோர் கண்ட கனவு இது புதுவாழ்வைத் தந்திட வருகிறது - மேகம் திறந்து..... படைத்தவரே நமக்காக படைத்திடும் அன்பு உணவு இது உழைப்பேதும் இல்லாமல் கொடையாய் வந்த உணவு இது நிறைவைத் தருகின்ற உணவு இது - அவர் நினைவாய் செய்யும் உறவு இது இதை உண்போம் அவரில் வளர்வோமே - மேகம் திறந்து..... |