திருமணப் பாடல்கள் | இறைவனின் திருச்சபையில் |
இறைவனின் திருச்சபையில் அன்பின் இதயங்கள் இறையருளால் இணைந்திடும் வேளையிது இறைவனின் திருச்சபையில் தனனனம் தம்தம் தனனனம் தம்தம் தனனனம் தம்தம் தனனனம் தம்தம் தனனன தம்தன தனனன தம்தன தனனன தம்தன தம் என்னென்ன தேவைகள் இன்னும் என்னென்ன தேடல்கள் அன்பின் தேவனை தேற்றிடுங்கள் எண்ணிய யாவுமே இங்கு என்றும் கைகூடுமே அன்பின் தேவனை போற்றிடுங்கள் காலமுள்ள வரையிலும் கத்தர் தந்த வேதம் அன்பின் பாடம் என்று பகர்ந்திடுவோம் (2) திருப்பலியினில் இணைந்திடுவோம் இத்தனை காலங்கள் நம்மில் எத்துணை நன்மைகள் அன்பின் தேவனைப் புகழ்ந்திடுங்கள் நீ செல்லும் இடமெல்லாம் தேவன் நானென்றும் உன்னுடன் என்ற தேவனில் மகிழ்ந்திடுங்கள் அன்புத் தாய்யுன்னை மறப்பினும் நானுன்னை மறந்திரு என்றுரைத்த தேவனன்றோ மண்ணில் என்ன தவம் நாம் செய்தோம் இன்று நன்றிப் புகழ் பாடிடுவோம் |