திருமணப் பாடல்கள் | அற்புதமே ஆண்டவர் செயலிதுவே |
அற்புதமே ஆண்டவர் செயலிதுவே அவர் அருளால் இணைந்திடும் தருணமிதே 2 இறைவனின் ஆசீர் தங்கிட இன்பமாய் வாழ்வு அமைந்திட 2 சொந்தங்கள் கூடிட நண்பர்கள் வாழ்த்திட அவர் முன்குறித்த மகிழ்ச்சியின் நாளிதுவே இல்லறம் என்னும் உறவுச் சோலையிலே 2 நல்லறம் காத்திட இணைந்த இதயங்களே 2 இறைவனின் வார்த்தையில் நிலைத்திருந்து ஈடில்லா நலன்களை பெற்றிடவே இச்செயல் நிகழ்ந்தது அவராலே இது இறைவன் அருளின் வெளிப்பாடே திருக்குடும்பம் போல் தியாகத்தில் சிறந்து மகிழ்ச்சியாய் நீர் வாழ்க அன்பும் மன்னிப்பும் ஏற்றலும் புரிதலும் நிதம் பெற்று நீர் வாழ்க அளவில்லா அன்பில் என்றும் வாழ்ந்திடுங்கள் 2 அனுதினம் ஜெபித்து வாழ்வில் திடம் பெறுங்கள் 2 2 இறைவன் தந்த புது உறவு இனிதே இன்று துவங்கியதே இன்பம் துன்பம் எது வரினும் பகிர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடுமே திருக்குடும்பம் போல் தியாகத்தில் சிறந்து |