Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் வாருங்கள் மணமக்களே  



வாருங்கள் மணமக்களே
இறை அருள் தரவே வாரீர் - நீவிர்
ஓர் மனம் கொண்டு திருமணம் கண்டு
நிறைவுடன் வாழவே
நாளும் இறைவழி வாழ்ந்திடவே

இருமணம் ஒருமனம் ஆகிடுமே
நிறை அருள் உன் வழி நின்றிடுமே
குறையெல்லாம் நிறைவாய் மாறிடுமே
குவலயம் உம்மை வாழ்த்திடவே
தேவனின் திருச்சபைத் தோட்டத்திலே
நறுமணம் வீசிட நுழைந்திடுவீர்

திருமணம் என்றொரு திருவிளக்கை
இருவரும் இணைந்து ஏற்றிடவே
வாழ்வின் உயர்விலும் தாழ்விலுமே
இருவரும் இணைந்தே சென்றிடவே
இயேசுவின் அன்பினை இதயத்திலே
ஏற்றிட வருவீர் மணமக்களே



 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்