திருமணப் பாடல்கள் | றோசாப்பூ வாசமலர்கள் |
றோசாப்பூ வாசமலர்கள் நாம் - இப்போ நேசமாய் நாளுமே தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தே சித்தி மெல்லிய சேர்ந்து அள்ளி வீசி நன்மணமக்கள் மீது நாம் எல்லா மலரும் தூவிடுவோம் மன்னனும் மாப்பிளை பண்புள்ள பெண்ணுடன் அன்றிலும் பேரும்போல் ஒன்றித்து வாழ ஆண்டவர் ஆசீர்வதிக்க நாம் வீங்குரலோடு தூவிடுவோம் புத்திரபாக்கியம் புகழும் நல்வாழ்வும் சத்தியம் சாற்றும் சுத்த நல் இதயம் நித்திய ஜீவனும் பெற்றிவரின் பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் அரைகுறையற்ற மணவாட்டி சபையை இறைவனாம் இயேசு பண்புடன் சேர்க்கும் மங்கள நாளை எண்ணியே - நாம் நேசமாய் நாளுமே தூவிடுவோம் |