Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் மணவாழ்வில் மலர்ந்த மணமக்களை  
மணவாழ்வில் மலர்ந்த மணமக்களை
ஆசீர் அளித்திடுவீர் - தேவா
அருள்மழை பொழிந்திடுவீர்

இருமனம் இணைந்த திருமண உறவில்
நறுமணம் கமழ்ந்திட நன்நிலை பெற்றிட
ஆசீர் அளித்திடுவீர் - தேவா
அருள்மழை பொழிந்திடுவீர்

மணமுள்ள மலர்களாக மனங்களில் மலந்திட
மனிதத்தில் புனிதத்தை மணவாழ்வில் கண்டிட
ஆசீர் அளித்திடுவீர் - தேவா
அருள்மழை பொழிந்திடுவீர்

இறைவனில் இணைந்து நிறைவாழ்வு கண்டிட
மறைவழி திகழ்ந்து நன் மக்கள் பெற்றிட
ஆசீர் அளித்திடுவீர் - தேவா
அருள்மழை பொழிந்திடுவீர்

திருமறைக் குடும்ப வழியினில் திகழ்ந்து
திருவருள் பெற்றிட திருப்பணி செய்திட
ஆசீர் அளித்திடுவீர் - தேவா
அருள்மழை பொழிந்திடுவீர்

பல்லாண்டு பல்லாண்டு நல்வாழ்வு கண்டிட
பரமனின் அருளாலே பாரினில் உயர்ந்திட
ஆசீர் அளித்திடுவீர் - தேவா
அருள்மழை பொழிந்திடுவீர்


 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்