திருமணப் பாடல்கள் | கல்யாண அழகு |
சாமி வரம் கொடுத்தாச்சு நிச்சய தாம்புழமும் கலந்தாச்சு மண மாலகட்டி வாருங்களே மேல தாளம் போடுங்களே கல்யாண அழகு முகத்தில் வந்தாச்சு மாங்கல்ய அருளும் சாமி தந்தாச்சு கனவும் நெனவாச்சு கடவுள் தந்த வரமாச்சு ரெண்டான மனங்கள் ஒன்றாகுதே இனி ஆனந்தமே என்றும் வைபோகமே ஆடுங்களே பாடுங்களே ஆனந்த கூத்துக்கட்டி வாழ்துங்களே ஏதேன் தோட்டத்துல பிறந்தது கல்யாணம் ஆதாம் ஏவாளின் குடும்பமதன் அடையாளம் கானா ஊருல மகிமையின் கல்யாணம் இயேசு சாமியின் புதுமையதன் ஆதாயம் தாயின் கருவிலே தோன்றிய முன்னமே தேவன் நியமித்த துணை உன் பந்தமே அன்பாலே ஒன்றாகும் அருளான கல்யாணமே ஆடுங்களே. பாடுங்களே.. ஆனந்தக்கூத்துக்கட்டி வாழ்த்துங்களே தேவன் இணைத்ததை தினமும் காக்கனும் இருவரும் ஒருயிராய் இறைவனுக்குள் வாழனும் இன்ப - துன்பங்களில் புரிதல் வளரனும் வாழ்விலும் தாழ்விலும் பேரன்பு பெருகனும் குழந்தை செல்வங்களை குடும்பம் காணனும் குணங்கள் போற்றிடும் கோவில் ஆகனும் அன்பாலே ஒன்றாகும் அருளான கல்யாணமே ஆடுங்களே... பாடுங்களே ஆனந்த கூத்துக்கட்டி வாழ்த்துங்களே)கல்யான அழகு) |