Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் ;இன்று முதல் உன்னை  

இன்று முதல் உன்னை நான் ஆசீர்வதித்திடுவேன்
என் சிறகுகளின் நிழலின் கீழ் உன்னைக் காத்திடுவேன்
உன்னை விட்டு விலகிடாமல் உன்னோடு என்றுமிருப்பேன்
உன்னை கைவிடாமல் உனக்கே துணையிருப்பேன்

நான் உனது அடைக்கலமும் ஆற்றலுமாய் இருந்திடுவேன்
உனக்கு முன்னே நான் சென்று தடைகளெல்லாம் தகர்த்திடுவேன்
பாவங்களை போக்கிடுவேன் நோய்களை குணமாக்குவேன்
உனது துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவேன்
பழயவை மறைந்திடும் புதுவாழ்வு உன்னைச் சேரும்
என் அன்பினால் உனைக் காப்பேன் கலங்காதே திகையாதே!

போகும்போதும் வரும்போதும் உன்னை நான் காத்திடுவேன்
நீடிய ஆயுளை உனக்குத் தந்து நலன்களினால் நிறைவளிப்பேன்
உனக்காக அனைத்தையுமே செய்து நான் முடித்திடுவேன்
கண்ணின் கருவிழிபோல் கருத்தாய் உனைக் காப்பேன்
அன்போடு அரவணைத்து ஆறுதல் நான் தருவேன்
காலமெல்லாம் என் கருணை உனைத் தொடரும் என் மகனே






 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே பாசமாய்