திருமணப் பாடல்கள் | இல்லறம் ஏற்கும் முன்னாலே |
இல்லறம் ஏற்கும் முன்னாலே நிச்சயம் செய்யும் இன்னாளே செல்வன் செல்வி இருவரையும் ஆசீர்வதித்திடுமே இறைவா ஆசீர்வதித்திடுமே இறைவா ஆசீர்வதித்திடுமே உமக்கு அஞ்சும் இருவருமே ஆசி பெற்று வாழ்வாரே உழைப்பின் பயனை என்நாளும் வளமுடனே பெறுவாரே ஆசீர்வதித்திடுமே ஆசீர்வதித்திடுமே ஆசீர்வதித்திடுமே இறைவா ஆசீர்வதித்திடுமே உமது அன்பின் வாழ்கையிலே உள்ள நிறைவை அடைவாரே இணைந்த உறவில் நாள் தோறும் இனிய வாழ்வை காண்பாரே ஆசீர்வதித்திடுமே ஆசீர்வதித்திடுமே ஆசீர்வதித்திடுமே இறைவா ஆசீர்வதித்திடுமே நீண்டகாலம் வாழ்ந்திடவே நீயும் அருளை பொழிந்திடவே பேரன் பேத்தி பார்வையிலே வாழ்வில் வசந்தம் தந்திடுமே ஆசீர்வதித்திடுமே ஆசீர்வதித்திடுமே ஆசீர்வதித்திடுமே இறைவா ஆசீர்வதித்திடுமே |