திருமணப் பாடல்கள் | ஆவியான தேவனே |
ஆவியான தேவனே அடைக்கலம் வந்தருள்வாய் ஆசீர்வதியும் இம்மணமக்களுக்கு அபயம் தந்தருள்வாய் அன்னியோநியமாய் இவர் அன்புடன் ஒத்து வாழ்ந்திட அளவில்லாத இவ் மக்கள் ஆதினமோடு அகமகிழ ஆபிராம் சாராளும் போல ஆனந்தமாய் இவர்கள் உய்ய ஆசி தாரும் அவையில் வாரும் ஆண்டவரே கிருபை செய்ய காணான் மன்றலில் ஜெலத்தை கனி ரசமாய் செய்த பரனே காட்சிகளும் மாட்சிகளும் கனிந்தருளிய கிருபாகரனே பிதா குமாரன் பரிசுத்தாவி பேரன்பின் வடிவாகிய அதி பிரிய ஆபிரகாமை காத்த பிரபாகரனே வானஜோதி |