திருமணப் பாடல்கள் | ஆசீர்வதியும் ஆண்டவா |
ஆசீர்வதியும் ஆண்டவா இப்புது மண மக்களை மங்களம் மணமகன் திருசெல்வனும் மங்களம் மணமகள் திருசெல்வியும் மகிழ்வுடன் என்றும் வாழ்ந்திடவே மரியின் மைந்தனை வாழ்த்துவீர் மக்களின் கிருபையால் முடிசூட்டி மட்டற்ற நன்மைகளால் நிரப்பி மனவாளன் இயேசுவே ஆசீர்வதித்தருளும் ஆண்டு பலவாக வாழ்ந்திட அன்பையே பண்பாகக் கொண்டிட ஆனந்தமே என்றும் கண்டிட அருளை மாரியாய்ப் பொழியுமே ஆதிமுதல் இறை அந்தம் வரை அவராகி அக்கறை அடையும்வரை ஆட்கொண்டு அன்போடு ஆசீர்வதித்தருளும் |