திருமணப் பாடல்கள் | ஆசீரளிப்பீர் ஆண்டவரே |
ஆசீரளிப்பீர் ஆண்டவரே அன்பாய் இந்த மணமக்களை வாழ்க்கை முழுதும் ஆனந்தமாய் வாழ்ந்து சிறக்க வேண்டுகிறேன் திருக்குடும்பத்தினைப் போல் வாழ்ந்து திருப்பணி பலவும் தினம் புரிந்து அருள் பெற்று வாழ்ந்திட ஆண்டவரே அன்புடன் உம்மை வேண்டுகிறோம் இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்து இருவரும் பங்கேற்று இனிதாய் இல்லறம் நடத்திடவே இறைவா துணையாய் இருந்திடுவீர் |