திருமணப் பாடல்கள் | ஆபிரகாமை ஆசீர்வதித்த |
ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே கல்லின் மனைபோலக் கணவனும் இல்லின் விளக்கெனக் காரிகையும் என்றும் ஆசிபெற்று இனிது வாழவே வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில் இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும் இணைந்து வாழவே இணைந்து வாழவே அன்பும் அறனும் அங்கோங்குமெனின் பண்பும் பயனும் உண்டாமே இன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும் வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவே நற்புகழடைந்து நண்பருடன் சுற்றம் நயந்து வாழவே நயந்து வாழவே உள்ளம் விரும்பிய செல்வமுடன் உத்தமச் சேய்களையே தாரும் நல்ல கீர்த்தி கொண்டு நாளும் வாழப் பாரும் வாழவே! வாழவே! வாழவே! என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே! ஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே வையகந்தனில் வல்லபிதா உம்மை வணங்கி வாழவே வணங்கி வாழவே |