திருமணப் பாடல்கள் | 1504-வல்லதேவா ஆசி கூற |
வல்லதேவா ஆசி கூற வாரும் இந்நேரத்திலே உந்தன் சமூகம் தந்து தயவாய் சேரும் இம்மன்றலிலே ஏதேன் விவாகத்தை அர்த்தத்தோடாக்கினிPர் ஆதாமுக்கேவாளை ஆதரவாக்கினீர் இல்லற வாழ்விலே இவ்விருவரை இணைத்தே இன்ப வாழ்வின் அன்பின் ஊற்றாய் ஓங்கிட ஆசி சொல்வீர் இம்மணவாளர்க்கும் ஆசியை மாரியாய் சொரிந்தே அன்புடன் ஆதரித்திடுவீர் இன்பம் நிறை வாழ்வை இவர்க்கென்றும் நீர் ஈந்தே இன்னல் இக்கட்டின்றி இதமாய் வாழ்ந்திட நிறைந்த அருள் செய்வீர் தம்பதிகள் புது வாழ்வினுள் சேருங்கால் காரணராகக் கரங்காட்ட முன் செல்வீர் பூலோக செல்வ சுகம் இவர்க்குப் புத்திர பாக்கியமும் பூரணமாகவே ஈந்தவர்க்கென்றும் நீர் புகலிடம் ஆகிடுவீர் முந்தையாம் அற்புதம் விந்தைக் கனாவிலே சிந்தை மகிழ நீர் செய்த மா தயவு மந்தையின் ஆயனே நல் சுந்தர வேந்தனே வந்து நின் சுந்தரக் கரத்தால் ஆசி தந்திட வேண்டுமையா |