திருமணப் பாடல்கள் | 1599-இதயம் இணையும் நேரம் |
இதயம் இணையும் நேரம் இன்பத் திருவிழா இறைவன் உறையும் நேரம் அன்புப்பெருவிழா ஆடுவோம் பாடுவோம் ஆனந்தமாய் வாழுவோம் அன்பினில் பண்பினில் அவனியைமாற்றுவோம் இனியராகத்தில் இன்ப ஓசையில் இதயராகம் எங்கும் ஒலிக்குது அன்புப்பாதையில் அருள் வடிவினில் அறங்கள் யாவும் ஆடிப்பாடுது (2) இறைவன் வாழும் இல்லம் அமைத்து மகிழவும் இறைவன் ஆட்சிசெய்யும் குடும்பம் அமைக்கவும் அன்பராய் நண்பராய் என்னில் வருகின்றார் (2) புதியபாதையில் புதியபார்வையில் புதியவாழ்க்கைப் பயணம் தொடங்குது புரட்சிநெறிகளில் புகழ்ச்சிப் பாக்களில் புதியபூமிமலரப் போகுது (2) அமைதிவாழும் இல்லம் கட்டிஎழுப்பவும் அன்புத் தெய்வம் வாழும் உறவுமலரவும் அன்பராய் நண்பராய் என்னில் வருகின்றார் (2) |