திருமணப் பாடல்கள் | 1594 -அன்பே இறைவா |
அன்பே இறைவா அனைவரும் ஒன்றாய் அகிலத்தில் வாழ்ந்திட அருள் புரியும் (2) ஒன்றாய் வாழ்ந்திட நன்றாய் வாழ்ந்திட அன்பாய் வாழ்ந்திட அருள் புரியும் (2) தனியாய் பிறக்கும் மானிடர்கள் துணையாய் வாழ்ந்திட அருள் புரியும் (2) இணையாய் சமமாய் ஆணும் பெண்ணும் இருகரம் கோர்த்திட அருள் புரியும் (2) தந்தையும் தாயும் குடும்பத்திலே சிந்தை ஒன்றாகிட அருள் புரியும் (2) பிள்ளைகள் பெற்றோர் பாசத்திலே பிணக்குகள் தீர்ந்திட அருள் புரியும் (2) பகைமையும் பிரிவும் மதவெறியும் நஞ்சென்று விலக்கிட அருள் புரியும் (2) நீதியை விதைத்து அமைதியையே அறுவடை செய்திட அருள் புரியும் (2) |