மரித்தோர் பாடல்கள் | -இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக |
இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக அவர் இறைவா உம்மிடம் வந்தடைக நின்ஒளி அவர் மேல் ஒளிந்திடுக பூவில் நிதம் அவர் நினைவு நிலைத்திடுக (2) தீயவை யாவும் விலகிடுக அவர் தினமுன் மகிழ்வில் திளைத்திடுக மண்ணக வாழ்வு மலர்ந்தாலும் - நிதம் விண்ணவர் அன்பில் நிலைத்திடுக (2) வானகத் தூதர் புனிதருடன் - என்றும் வாழ்ந்திடும் தகுதியில் உயர்ந்திடுக உலகினில் அவர் இறந்தாலும் - இறை உறவினில் நிலைத்தே வாழ்ந்திடுக (2) சாவுயிர்க் கதவினை அடைத்தாலும் - நித்திய சாந்தியில் என்றும் இடம் பெறுக |