Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் உருவாகு முன்பே அறிந்தவரே  
உருவாகு முன்பே அறிந்தவரே
கருவாகு முன்பே தெரிந்தவரே
கருவறை நின்றே அழைத்தவரே
கல்லறை தொடர்ந்தும் அழைத்திடுக - உம்
அடியாரின் ஆன்மா இழைப்பாறுக

நல்லதோர் ஓட்டத்தை முடித்த உம் அடியாரின்
ஆன்மாவின் அமைதிக்காய் ஜெபிக்கின்றோம்
சிறிய பொறுப்பினில் நம்பிக்கையானதால்
வெகுமதி அடைந்திட வேண்டுகின்றோம்
இயேசுவின் இதயமும் மரியாளின் தாய்மையும்
துணையாய் உறவாய் எழுந்திடுமே
அழைத்திடும் ஆண்டவர் அதிசயம் செய்பவர்
நிலையான பேரின்பம் அழைந்திடுமே - (2)

திருப்பணி புரிந்த கரங்களும் இதுவே
பயணங்கள் நடந்த கால்களும் இதுவே
கடவுளின் வார்த்தையை அறிவித்த நாவும்
எளியோரை வாழ்வித்த உருவமும் இதுவே
இடர் வரினும் தொடர் பயணங்கள் புரிந்தே
பணிகளை முடித்திட்ட திருவுளம் இதுவே
தன்னையே இழந்தே உமக்காய் கரைந்தே
மெழுகாய் உருகின ஒளி இதுவே - (2)


ஆண்டவரே நித்திய இளைப்பாற்றியை இவர்களுக்கு அளித்தரும்
முடிவில்லாத ஒளி அவர்கள் மேல் ஒளிர்வதாக



 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக