Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் தாயே உத்தரிக்கும்  

தாயே உத்தரிக்கும் ஸ்தலத்தோருக்கு
ஓயாத் தஞ்சமும் ஆதரவும் நீயே

தீயில் விழுந்து வெந்து சோர்ந்து - உந்தன்
திருத்தயை கேட்க நீயோ அறிந்து
தூய வான் துதியினில் சேர்ந்து - உம்மை
துதித்திட அருள் செய்வாய் புரிந்து

உலகம் பசாசை தினம் வென்றார் - தங்கள்
உடலுக்கு ஓயாதெதிர் நின்றார்
கலகமெல்லாம் கடந்த பின்னும் - சொற்பக்
கறையினால் துறை சேரார் இன்னும்

தாய் விட்டுப் பிள்ளை நிற்கலாமோ - உந்தன்
தயைவிட்டால் துயர் விட்டு போமோ
தூய கருணை நிறைதாயே - இவர்
துயர் எல்லாம் நீங்க வருவாயே






 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக