மரித்தோர் பாடல்கள் | இறைவா இதோ வருகின்றோம் |
இறைவா இதோ வருகின்றோம் உம் திருவுள்ளம் நிறைவேற்ற கல்லான இதயத்தை எடுத்து விடு எம்மைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு எம்மையே நாங்கள் மறக்கவிடு கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு துளிக்கும் விழிநீர் கொணர்கின்றோம் - அதைத் துடைப்பாய் என உனைக் கேட்கின்றோம் வறியவர் கண்களின் வடிநீரை - இன்று மறந்தோம் எம்மை மாற்றிடுவாய். |