Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் இறப்பது சுகமானது  

இறப்பது சுகமானது உயிர்
இழப்பது புனிதமானது
இறைப் பாதமே தலையானது
இறை தேசமே நிலையானது
சுற்றி இருக்கும் சுகங்கள் எல்லாம்
எட்டி நிற்கும் முடிவானது -2

சொந்தங்கள் மறந்து செல்வங்கள் துறந்து
போகும் பாதையோ சுகமானது -2
தங்கி வாழ தயவு வேண்டி
தஞ்சம் தேடும் மனங்கள் இங்கே -2
மனங்கள் இங்கே -2

அசைவுகள் இழந்து அமைதியில் உறங்க
அனைத்தும் காண்பது சுகமானது -2
அமைதி சூழும் விண்ணைத் தேடி
அடங்கிப் போகும் வாழ்வு இங்கே
வாழ்வு இங்கே 2

கட்டுவோர் விலக்கிய கல்லாய் எரிந்தேன்
கடினப் பாதைகள் கனிவானது -2
கடவுள் என்னை ஏற்றுக் கொண்டார்
மூலைக்கல்லாய் வைத்தார்
இறைவன் இன்றே
இறைவன் இன்றே -2






 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக