மரித்தோர் பாடல்கள் | இறைவா இவரது திருப்பயணம் |
இறைவா இவரது திருப்பயணம் இனிதே அமைந்திட இறைஞ்சுகின்றோம் 1. பாஸ்கா பயணம் இதுவேதான் கிறிஸ்தவன் செல்லும் வழி இதுதான் இறப்பைக் கடந்த உயிர்ப்பிற்கு இசைந்து செல்லும் வழி இதுதான் 2. அடிமைத் தளையை அறுத்தெறிந்து ஆண்டவன் மக்கள் அன்றொரு நாள் உரிமை நாடு கடந்து சென்றார் உண்மை இங்கு நடப்பது தான் 3. சிலுவை சுமந்த வழியினிலே சீர்மிகு உயிர்ப்பும் பிறந்ததுவே சிலுவை பதிந்த சுவடுகளில் சீடர் இவரும் செல்கின்றார் 4. துன்பத்தின் வழியாய் திருச்சபையும் தூரப்பயணம் போவது போல் பயணத்தின் முடிவில் இவ்வடியார் பரகதி சேர்ந்திட இறைஞ்சிடுவோம் 5. விண்ணக விருந்து உண்டிடவே விரைந்து செல்லும் இவ்வடியார் திருமகன் வந்து பார்க்கையிலே திருமண உடையுடன் திகழ்ந்திடவே 6. ஆண்டவர் அழைத்த நேரத்திலே அணையா விளக்குடன் ஆயத்தமாய் உடனே செல்லும் ஊழியராம் உண்மையில் பேறு பெற்றவரே 7. அந்நிய நாட்டின் எல்லைதனை அடியார் இவரும் கடந்துவிட்டார் இழப்பு அனைத்தும் அவரின்றி தவறாது தன்வீடு சேர்ந்திடவே 8. எனக்கு வாழ்வு கிறிஸ்துவே தான் என்றும் அவரோடிருப்பது தான் தாயகம் திரும்பும் பயணி இவர் இறப்பு ஆதலின் ஆதாயம் |