மரித்தோர் பாடல்கள் | இதோ நான் வருகின்றேன் |
அம்மையப்பனே இறைவா இறப்பினை இழப்பாகப் பார்க்கும் இவ்வுலகில் இறப்பினை மீட்பு என்று கற்றுத் தந்தீரே என்னை நம்பி வாழ்கிறவன் இறப்பினும் வாழ்வான் என்று சொன்னீரே இறப்பினை மறுவுலகப் பிறப்பென்றும் இம்மையிலிருந்து மறுமை நோக்கிய பயணத்தில் நாளுக்கு நாள் நாங்கள் நம்பிக்கையில் வளர நீரே அருள்வீராக மார்மீதும் தோள்மீதும் சுமந்துக்கொள்ளும் - உம் மடிமீது இளைப்பாற்றி அளித்தருளும் இதோ நான் வருகின்றேன் இறைவா எனை ஏற்றருள்வாய் இருப்பதுபோல் என்னை ஏற்பதும் நீர் தானே இறந்தும் என்னோடு இருப்பதும் நீர் தானே - ஓ இறைவா மார்மீதும் தோள்மீதும் சுமந்துக்கொள்ளும் - உம் மடிமீது இளைப்பாற்றி அளித்தருளும் - உம் இதோ நான் வருகின்றேன் இறைவா எனை ஏற்றருள்வாய் இலவசமாக எனைப் படைத்தாய் இருந்தது எல்லாம் எனில் நிறைத்தாய் திறமைகள் ஆயிரம் எனக்களித்தாய் பிறனுடன் வாழ்ந்திட வழிவகுத்தாய் இயன்றவரை நான் வாழ்ந்து விட்டேன் இறுதிப் பயணத்தில் இருக்கின்றேன் இசைந்தென்னை ஏற்றருள்வாய் இறைவா மார்மீதும் தோள்மீதும் சுமந்துக்கொள்ளும் - உம் மடிமீது இளைப்பாற்றி அளித்தருளும் - உம் இதோ நான் வருகின்றேன் இறைவா எனை ஏற்றருள்வாய் திருவருட்சாதனம் வழியாக திருத் தூய ஆவியின் வலுவளித்தாய் சமபந்தியாகும் திருப்பலியில் சமத்துவம் சுவைத்திட ஆசி தந்தாய் முடிந்தவரை நான் உயர்ந்து விட்டேன் முழுமையைத் தேடி வருகின்றேன் மீட்டெனை ஏற்றருள்வாய் இறைவா மார்மீதும் தோள்மீதும் சுமந்துக்கொள்ளும் - உம் மடிமீது இளைப்பாற்றி அளித்தருளும் - உம் இதோ நான் வருகின்றேன் இறைவா எனை ஏற்றருள்வாய் |