மரித்தோர் பாடல்கள் | அஞ்சாதே அஞ்சாதே நான் |
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு என்ன துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2 குன்று அசையலாம் குகைகள் பெயரலாம் உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் என்ன நிலைதான் ஆனாலும் உந்தன் அன்பு மாறாதே அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2 அன்னை குழந்தையை அணைக்க மறுப்பாளோ என்ன துன்பமும் நெருங்க விடுவாளோ அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நான் மறவேனே அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2 |