Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் 1592 -வாழ்வோரின் தேவனே  

வாழ்வோரின் தேவனே மரித்தோரின் மீட்பரே
கல்லறைத் திருவிழாவில் கரை சேர்க்க வாருமே (2)
                                          அல்லது
வாழ்வோரின் தேவனே மரித்தோரின் மீட்பரே
இறந்தோரின் நினைவு நாளில் கரை சேர்க்க வாருமே (2)

                                         அல்லது
வாழ்வோரின் தேவனே மரித்தோரின் மீட்பரே
இறந்தோரின் அடக்க நாளில் கரை சேர்க்க வாருமே (2)

நித்திய அமைதி தாரும்
உன்னத வாழ்வைத் தாரும்
பவமதைப் போக்கும் பரிசுத்தமாக்கும்
உம் திருவடி சரணம்
சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே (2)
சாவை நீர் நிலைவாழ்வாய் மாற்றினீரே
பிரிந்த எம் சகோதரர் பாவத்தளை அறுத்துமே
பரமனின் பாதம் சேர்த்திட வேண்டும் (2)

இறந்தோரின் கல்லறை தன்னில்
அடக்கம் செய்த ஆன்மா மீது (2)
தேவரீர் இப்போது இரங்குமே
உத்தரிக்கும் ஆன்மாக்கள் ஈடேற்றம் அடைந்துமே
நித்திய வாழ்வதில் சேர்ந்திட வேண்டும் (2)

இறந்தோரின் இழப்பால் வாடும்
சுமையாலே சோர்ந்து வாழும் (2)
அடியாரை ஆறுதலால் நிரப்புமே
இருள் சூழும் நெஞ்சத்தை வழிந்தோடும் கண்ணீரை
உம்கரம் கொண்டு துடைத்திட வேண்டும் (2)

இறந்துபோன ஆயர்கள் குருக்கள்
உம்மையடைந்த கன்னியர் ஊழியர் (2)
உன்முக தரிசனம்பெற தயை செய்யும்
உம்மீது நம்பிக்கை வைத்தாலே என்றென்றும்
இறப்பினும் வாழலாம் என்பதை உணர்த்துமே


 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக