மரித்தோர் பாடல்கள் | 1585 -இறைவனின் திருக்கரம் |
இறைவனின் திருக்கரம் மா பெரிய புதுமைகள் ஆற்றிய தென்னையுமே தம் வல்லமையால் என்னைத் தாங்கி எனக்குயிர் அளித்ததை என்ன சொல்வேன் மரணத்திற் கென்மேல் வல்லமையில்லை இறைவனின் அருட்செயலைப் புகழ்வேன் தம் திரு நாமத்தை நினைத்தே இறைவன் தம் மகிமையை நமக்களித்தார் தம் மரணத்தால் அருள் உயிரை அளித்தார் அவர்க்கே நன்றி சொல்வோம் நமக்கெனத் துன்புற்று உயிர்த்தெழுந்தார் நமக்கென பாவத்தை அழித்தாரே நமக்கென அலகையைத் தோற்கடித்தார் நமக்கென அருஞ்செயல் பல புரிந்தார் ஆகவே அவருக்கு நன்றி சொல்வோம் அவரது புகழினைப் பாடிடுவோம் |