மரித்தோர் பாடல்கள் | -யாருக்கு நிம்மதி வேண்டும் |
யாருக்கு நிம்மதி வேண்டும் யார் துயர் தீர்த்திட வேண்டும் இறைவனில் நம்பிக்கை வேண்டும் இருந்தால் உனை வந்து சேரும் வந்து சேரும் மனமே அறிவாய் மனமே அறிவாய் இறைவனின் வார்த்தை உயிருள்ளது என்ன நிகழ்தாலும் உன்னை வாழ்விப்பது கடலை இரண்டென பிரித்தின்று மலை குன்றினை நடத்திடச் செய்குவது கடும் புயல் காற்று என்றாலும் நிலைத்துவிடும் இறை வார்த்தை இறை வார்த்தையை நம்பி வாழ்ந்துவிடு கல்லறை இருந்த மனிதனையும் ஒரு சொல்லால் உயிருடன் அழைத்தன்று தொல்லையுறும் பல நோயருக்கு இறை சொல்லே நலமேயூட்டியது உடலில் உயிர் பிரிந்தாலும் உடனே அது வந்து சேரும் இறைவார்த்தையை நம்பி வாழ்ந்துவிடு இறைவனின் பிறப்பு மரித்ததுமே அன்று சொல்லிய சொல்லின் சிறப்பாகும் முன்னாள் உரைத்தது என்றாலும் ஒரு புள்ளியும் மாறா நிலையாகும் இறைவன் எழுதியதாகும் என்றும் நிலையுள்ளதாகும் இறைவார்த்தையை நம்பி வாழ்ந்துவிடு கழுமரம் ஏறிய கள்வனையும் இறை சொல்லே மன்னிப்பு வழங்கியது கல்லால் எறிபடும் பாவியர்க்கு - இறை சொல்லே கருணை காட்டியது எத்துணை துன்பம் வந்தாலும் இனிதாக அது மாறும் இறைவார்த்தையை நம்பி வாழ்ந்துவிடு |