மரித்தோர் பாடல்கள் | -சோதிதோன்றுமோர் தேசமுண்டு |
சோதிதோன்றுமோர் தேசமுண்டு விசுவாசக்கண்ணால் காண்கிறோம் நேசபிதா அங்கே நமக்கு ஓர் ஸ்தலம் வகிப்பார் செல்லுவோம் இன்பமாம் சற்றே பின் சந்திப்போம் சோதி மண்டலத்தில்... இன்பமாம் சற்றே பின் சந்திப்போம் சோதி மண்டலத்தில்..... அந்தவான் கரையில் நாம் நின்று விண்னோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாதுமற்று மகிழ்ந்து கத்தரில் ஆறுதல் அடைவோம் இன்பமாம் சற்றே பின் சந்திப்போம் சோதி மண்டலத்தில்.... என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே ஆயினும் இனி நான் பாடுவேன் அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே ஓய்வில்லா பேரின்பம் அடைவேன் இன்பமாம் சற்றே பின் சந்திப்போம் சோதி மண்டலத்தில்..... சாவற்றோர் பூரிக்கும் நேரத்தில் சந்திப்போம் பாடுவோம் ஆடுவோம் துக்கம் நோ அழிந்த ஸ்தலத்தில் சேமமாய் நாம் இளைப்பாறுவோம் அங்கே நம் இறைவன் என்றென்றும் ஆளுகை செய்து வீற்றிருப்பார் துக்கம் நோ சாவுகள் நீங்கிடும் இறைவன் நம் கண்ணீரைத் துடைப்பார் |