Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் -நித்திய சாந்தி அளித்தருளும்  

நித்திய சாந்தி அளித்தருளும் - இறைவா
நீ இவர் பரிசாய் இருந்தருளும்

உம் மகன் இவர்கென உயிர் துறந்தார்
தம் உதிரமும் உடலும் பலியீர்ந்தார்
இறப்பில் அவருடன் ஒன்றித்து - இவர்
உயிர்ப்பிலும் இணைந்து மாட்சியுற

செபங்களும் புகழ்ச்சிப் பலிகளுமே
யாம் செய்தோம் இறந்தோர் சாந்தியுற
எம்பலிப் பொருளிதை ஏற்றிடுவாய் - நீ
எளியரெம் செபங்களைக் கேட்டருள்வாய்

பாவத் தளைகள் அறுந்துவிழ உம்
பதமலர் நிழலில் இழைப்பாற
கடவுள உம் கரங்களில் கண்துயில நீர்
கருணையுடன் எம் பலியேற்று

 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக