Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

மரித்தோர் பாடல்கள் -மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு  


மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்புத் தாருமே இறைவா 2

ஆண்டவர் ஆன்மாவை விரும்புகிறார்
மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்
அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில்
வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்

ஆண்டவர் ஞானத்திற் கினிமையண்டு
கண்டிக்கக் காலத்தைக் கடத்துகின்றார்
கண்டித்து கருணைச் சொல் கூறுகின்றார் - பாவி
திருந்திட அருங்கொடை வழங்குகின்றார்

குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்
நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்
குற்றங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தால் - தேவன்
குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்

பாவத்தை வெறுத்துத் தள்ளிடுவோம்
ஆபத்தை விலக்கிச் சென்றிடுவோம்
ஆன்மாவை அவரிடம் காட்டிடுவோம் - அதன்
பாவத்தைக் கழுவிட வேண்டிடுவோம்



 

இறந்தோர் வாழ்வு ஒளிபெறுக