Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் உன்னோடு நான் உந்தன் தூய வெள்ளி


உன்னோடு நான் உந்தன் பாதையில்
சிலுவையுடன் தினம் நடந்திடவே
சிலுவையின் பயண நிலைகளிலே நான்
சிந்தை ஒன்றிட அருள்வாயே உன்னோடு
என் இறைவா என் இறைவா சிலுவையின்றி மீட்பு இல்லை
இந்த உண்மையை ஏற்றிடும் ஆற்றலைத் தா
சுமைகளைச் சுமந்திட அருளினைத் தா

1) தீர்ப்பிடவே நீதிமான் இயேசுவை
கூண்டில் நிறுத்தி பழிக்கின்றார்
மனிதம் காத்திட உழைத்தவர்க்கு
மரணத்தீர்ப்பை நல்குகிறார் தீர்ப்பிடவே தீர்ப்பிடவே ........

2) சிலுவை மரம் இயேசுவின் தோள்களில்
தாங்கிட முடியா சுமை நெஞ்சில்
கல்வாரி நோக்கிய பயணத்தையே
கழுமரத்துடனே தொடங்குகின்றார்
சிலுவை மரம் ..........

3) விழுகின்றார் சிலுவையின் சுமையால்
எழுகின்றார் முழு பலத்துடனே
வீழ்ச்சியின் வலிகளை மறந்துவிட்டு
எழுந்து பயணம் தொடர்கின்றார்
விழுகின்றார் .........

4) தாயைவிட சிறந்த அன்பு
தரணியில் எங்கும் வேறுண்டோ
சிலுவை மரத்துடன் மகனைக் கண்ட
தாயின் துயருக்கு ஈடுண்டோ
தாயைவிட.......

5) மறுத்திடவே முடியா நிலையில்
உதவிட சீமோன் விரைகின்றார்
இதயம் தொலைத்திட மனிதரிடை
கலங்கிடும் மொழியாய் திகழுகின்றார்
மறுத்திடவே ..........

6) துணிவுடனே இயேசுவின் முகத்தை
வெரோணிக்காள் துடைத்தார் துணியாலே
உருவம் பரிசாய் பதிந்ததுவே
உள்ளதும் அவர்பால் சென்றதுவே
துணிவுடனே.........

7) மண்மீது மீண்டும் விழுந்தார்
நடந்திடும் வலுவினை இழந்துவிட்டார்
மனிதரை விடுவிக்க வந்தவரை
மண்ணில் விழுத்தி மகிழுகின்றார்
மண்மீது .........

8) அழுகையுடன் இயேசுவின் பின்னால்
எருசலேம் மகளிர் நடக்கின்றார்
உங்களின் பிழைக்காய் அழுவீரென்றார்
பிழையற்ற உலகம் படைக்கச் சொன்னார்
அழுகையுடன் .........

9) மறுபடியும் மண்ணில் விழுந்தார்
சிலுவையின் அடியில் சிதைகின்றார்
உயிர் கொல்லும் வலியால் துடிதுடித்தும்
இலக்கினை அடைந்திட எழுகின்றார்
மறுபடியும்..........

10) ஆடைகளைக் களைந்திட தந்தார்
அவமான வேதனை அனுபவித்தார்
உடலின் வலியுடன் உள வலியும்
சேர்ந்திட மனுமகன் துடிக்கின்றார்
ஆடைகளை........
 
11) ஆணிகளால் கரங்களைத் தளைத்தார்
கால்களை சேர்த்தும் அறைந்டதுவிட்டார்
ஆவியைப்பறித்திடும் நோக்குடனே
சிலுவையில் சேரர்த்து தொங்கவைத்தார்
ஆணிகளால் ..........

12) தந்தையே உன் கைகளில் எந்தன்
உயிரையே நான் தருகின்றேன்
என்று கதறி உயிர் கொடுத்தார்
எலகம் வாழ்ந்திட வழிசெய்தார்
தந்தையே .......தந்தையே .......தந்தையே .......

13) மடி சுமந்தார் அன்னை உயிரற்ற உடலை
உளம் நொந்தார் அவர் துயரடைந்தார்
உள்ளத்தை உருக்கிடும் வலி உணர்ந்தார்
உடைந்தார் சிதறி உருக்குலைந்தார்
மடி சுமந்தார் ...........

14) கல்லறையில் உடல் அடங்கிடச் செய்தார்
முடங்கிவிட்டார் எனக் கனவு கண்டார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
உலகம் உயர்ந்திட வழியானார்
என் இறைவா.............

15) உன்னோடு நான் உந்தன் பாதையில்
சிலுவையுடன் தினம் நடந்திடவே
சிலுவையின் பயண நிலைகளிலே நான்
சிந்தை ஒன்றிட அருள்வாயே
என் இறைவா.............


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?