Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் என்னை நேசிக்கின்றாயா மகனே! தூய வெள்ளி


செம்..மறி இவரே செம்..மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்..மறி இவரே
செம்மறி இவரே செம்..மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்மறி இவரே

கல்வா..ரி பீடத்தில் காணிக்கை யாகும்
நண்ப ருக்காக உயிர் கொடுக்கும்

செம்..மறி இவரே செம்..மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்..மறி இவரே

1st STATION
சதிகாரர் அதிகார முனை சா..ய்த்தது
இல்லாததும் பொல்லாததும் சபையேறுது
சதிகாரர் அதிகா..ரமுனை சாய்த்தது
இல்லாததும் பொல்லாததும் சபையேறுது

2nd STATION
பழி பாவம் நான் செய்து சுமை கூட்டினே..ன்
பரிகா..ர பலியா..க தோழ் நீட்டினா..ய்
பழி பா..வம் நான் செய்து சுமை கூட்டினே.ன்
பரிகா..ர பலியா..க தோழ் நீட்டினா..ய்

3rd STATION
தடம் மா..றி தவறாகி நான் வாழ்வதால்
தடுமா..றி தரை மீது நீர் வீழ்..கிறீர்
தடம் மாறி தவறா..கி நான் வாழ்வதால்
தடுமாறி தரை மீ..து நீர் வீழ்கிறீர்

செம்..மறி இவரே செம்..மறி இவரே
கழுமரம் ஏறும் செம்மறி இவரே


4th STATION
போ ராட்ட களம் கண்ட இறை மைந்தனை
பாராட்ட வலம் வந்தார் மரி அன்னையே
போ ராட்ட களம் கண்ட இறை மை..ந்தனை
பாராட்ட வலம் வந்தார் மரிஅன்னையே


5th STATION
துயர் வேளை தோழ் தந்து துணை செய்.திட்டாய்
சீமோனும் வரலாற்றில் இடம் சேர்ந்திட்டாய்
துயர் வே.ளை தோழ் தந்து துணை செய்திட்டாய்
சீமோனும் வரலாற்றில் இடம் சேர்ந்திட்டாய்
செம்மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏறும் செம்மறி இவரே

6th STATION
கண்ணீரும் செந்நீரும் முகம் நிறைத்திட
துணிவோடு துடைக்கின்றார் நல்லேரோனிக்கா
கண்ணீரும் செந்நீரும் முகம் நிறைத்திட
துணிவோடு துடைக்கின்றார் நல்லேரோனிக்கா

7th STATION
பா..வங்கள் பாரங்கள் என சூழ்ந்ததா..ல்
பாதங்கள் பழுதாகி தரை சாய்கின்றாய்
பா..வங்கள் பாரங்கள் என சூழ்ந்ததா..ல்
பாதங்கள் பழுதாகி தரை சாய்கின்றாய்
செம்மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏறும் செம்மறி இவரே


8th STATION
விழியோரம் வழிந்தோடும் கண்ணீ.ரினால்
வழியோரம் வலு சேர்க்கும் பெண்மணிகள்
விழியோ..ரம் வழிந்தோடும் கண்ணீரினால்
வழியோரம் வலு சேர்க்கும் பெண்மணிகள்
செம்..மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்மறி இவரே


9th STATION
விழும்போது எனை தாங்கும் சுமைதாங்கி நீ
விழுந்திட்ட உனை இங்கு யார் தாங்குவார்
விழும்போது எனை தாங்கும் சுமைதா..ங்கி நீ
விழுந்திட்ட உனை இங்கு யார் தாங்குவார்
செம்..மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்மறி இவரே


10th STATION
உடல் மூடி மறைக்கின்ற நூலாடையை
இழிமாந்தர் களைந்திட்டார் >கல்நெஞ்சுடனே
உடல் மூ..டி மறைக்கின்ற நூலாடையை
இழிமாந்தர் களைந்திட்டார் கல்நெஞ்சுடனே
செம்..மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்மறி இவரே



11th STATION
குணம் நல்கும் குணசீலன் கொடும் ஆணியால்
அறையுண்ட அநியா..யம் அரங்கேறுதே
குணம் நல்கும் குணசீலன் கொடும் ஆணியால்
அறையுண்ட அநியாயம் அரங்கேறுதே
செம்மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்..மறி இவரே



12th STATION
உரு தந்து உயிர் காக்கும் நல்ல ஆ..யனை
ஆடுகளே கொலை செய்து பழி சுமந்தனவே
உரு தந்து உயிர் காக்கும் நல்ல அயனை
ஆடுகளே கொலை செய்து பழி சுமந்தனவே
செம்..மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏ..றும் செம்மறி இவரே



13th STATION
தாலா..ட்டில் தலையாட்டும் தவமைந்தனின்
திருச்சடலம் மடிதாங்கும் வலிதாங்கினாய்
தாலா..ட்டில் தலையாட்டும் தவமைந்தனின்
திருச்சடலம் மடிதாங்கும் வலிதாங்கினாய்
செம்மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏறும் செம்மறி இவரே


14th STATION
உனக்கென்று உடமை என எதை சேர்த்தாய் நீ
அடுத்தவரின் கல்லறையில் கண் மூடினாய்
உனக்கென்று உடமை என எதை சேர்த்தாய் நீ
அடுத்தவரின் கல்லறையில் கண் மூடினாய்
செம்மறி இவரே செம்மறி இவரே
கழுமரம் ஏறும் செம்மறி இவரே


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?